அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

 

FAQ TAMIL

1. கோட்டியக் வடினா அதஹசாக் (KVA) – என்றால் என்ன?

கோட்டியக் வடினா அதஹசாக் (KVA) (கோடி பெறுமதியான சிந்தனை)  என்பது இலங்கையில் முன்னெடுக்கப்படும் முதலாவது தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க மற்றும் தொழில்முயற்சியாண்மையை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். சிறந்த நாளையை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தாக்கமான சிந்தனைகளை மேம்படுத்துவது KVAன் நோக்கமாக அமைந்துள்ளது. போட்டியின் போது, போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதுடன், உங்கள் சிந்தனையை பயனுள்ள தயாரிப்பு/ தீர்வு ஒன்றுக்காக மாற்றியமைப்பதுடன், வெற்றிகரமான புதிய வியாபார திட்டமாக கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பர். மொபிடெல் மற்றும் சிரச தொலைக்காட்சி இணைந்து 2016ல் இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருந்தன. KVA தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் பருவ காலம் 2017ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2. KVA பருவம் 2ல், முதல் பருவத்துடன் ஒப்பிடும் போது ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா?

முன்னைய பருவத்துடன் ஒப்பிடுகையில், பருவம் 2 மாறுபட்டது, இதில் ஆலோசனை வழங்கல் பிரதான அம்சமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3. ஆலோசகர்கள் யார்?

தொழில்நுட்பத்துறைஃதொழில்முயற்சியாளர்கள் போன்ற புகழ்பெற்ற நபர்கள், ஆலோசனை வழங்கல், மேற்பார்வை செய்தல் மற்றும் அணிகளை வழிநடத்தல் மற்றும் தனிநபர்களின் ஆளுமைகளை விருத்தி செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு, சிந்தனையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுவார்கள்.

5. KVA ல் என்ன நடைபெறும்?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் ஒன்லைனில் தம்மை பதிவு செய்து தமது சிந்தனைகளை சமர்ப்பிக்கலாம். ஆரம்ப தெரிவு முறையின் பின்னர், குறித்த சிந்தனைகளின் உரிமையாளர்கள் வசஅமைவை முன்னெடுக்குமாறு (orientation) அழைக்கப்படுவார்கள்.

ஆரம்பகட்ட சிந்தனை வெளிப்படுத்தலினூடாக போட்டியாளர்களை ஆலோசகர்கள் தெரிவு செய்து, அவர்களை மேலும் ஊக்குவித்தல், தயார்ப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் அவர்களின் சிந்தனைகளை ஆக்கமாக வடிவமைப்பதற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டு முன்னெடுப்பார்கள். ஆலோசகர்களால் ஆரம்ப நிலை வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், பிரதான சமர்ப்பிப்புகள் துறைசார் நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும். தயாரிப்பு நிலைத்திருப்பு, முதல்உரு, வியாபார இயல்மை, சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களுக்கமைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். ஓவ்வொரு நிலையிலும் அணிகள் நடுவர்களால் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, மாபெரும் இறுதிப்போட்டிக்காக எண்ணிக்கை குறைக்கப்படும். மாபெரும் இறுதிப்போட்டியில் சிறந்த புத்தாக்கம்/களுக்கு வெகுமதி வழங்கப்படும்.

4. எந்த வகையான சிந்தனைகளை சமர்ப்பிக்க முடியும்?

எந்தவொரு துறையுடன் தொடர்புபட்டதாக சிந்தனைகள் காணப்படலாம், ஆனாலும் அவற்றில் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இது ஒரு பொதுவான பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய எளிமையான ஒரு தொழில்நுட்ப சாதனமாக அமைந்திருப்பது முதல், முற்றிலும் பிரத்தியேகமான ஒரு விடயமாகவும் அமைந்திருக்கலாம். மொபைல், இணையம், IoT, cloud, big data, electronics, NFC, virtual reality போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு நாம் ஊக்குவிக்கிறோம். இவற்றைக் கொண்டு புத்தாக்கமான தயாரிப்புகள், தீர்வுகள், கட்டமைப்புகள், அப்ளிகேஷன்கள் போன்றவற்றை உருவாக்கலாம். மேலும், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றுடன் தொடர்புடைய வியாபார உணர்வுடன் உங்கள் சிந்தனைகளை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

6. போட்டிக்கான பதிவு எப்போது ஆரம்பமாகும்?

2017 ஆகஸ்ட் 18ம் திகதி முதல் பதிவுகள் ஆரம்பமாகும்

7. விண்ணப்பிக்கும் வகை என்ன, தனிநபராக அல்லது அணியாக?

சிந்தனை சமர்ப்பிப்பு என்பது தனிநபர் அடிப்படையில் முன்னெடுக்கப்படும். நிகழ்ச்சியின் போது, போட்டியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அதேபோன்ற சிந்தனையை கொண்ட ஏனையவர்களுடன் அணியாக இணைந்து போட்டியாளர்கள் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் வியாபாரம்/நிதி போன்ற பிரிவுகளில் ஆளுமை படைத்த அணியாக திகழலாம்.

8. KVA க்கு எவ்வாறு பதிவு செய்து கொள்வது?

ஒன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். போட்டியாளர்கள் kva.mobitel.lk எனும் ஒன்லைன் முகவரியை பின்பற்றி தமது சிந்தனையை சமர்ப்பிப்பதற்கான பதிவு செய்து கொள்ளலாம்.

9. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எப்போது?

வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

10. பங்குபற்றுநர்களுக்கு ஏதேனும் பிரவேச நிபந்தனைகள் பொருத்தமானதாக அமையுமா?

தகைமை விதியை நாம் கவனத்தில் கொள்வோம். மேலும் அறிந்து கொள்ள KVA நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கவும்

11. ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனையுடன் என்னால் பங்குபற்ற முடியுமா?

அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆனாலும், நீங்கள் கொண்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனைகளிலிருந்து சிறந்ததை நன்கு கவனமாக ஆராய்ந்து சமர்ப்பிப்பது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

13. நிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கு மொழியில் ஏதேனும் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றனவா?

தமிழ், ஆங்கிலம் அல்லது சிங்களம் ஆகிய எந்தவொரு மொழியிலும் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனாலும், நிகழ்ச்சி சிங்கள மொழியில் நடைபெறுவதால், அந்த மொழியை இயன்றளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

12. பதிவுக்கான இறுதித்திகதியின் பின்னர் என்ன நடக்கும்?

ஆரம்ப கட்ட விண்ணப்பங்கள் தெரிவு நடைபெறும், தெரிவு செய்யப்படும் சிந்தனைகளுக்குரிய உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு, வசஅமைவை முன்னெடுக்குமாறும் (orientation) அதனைத்தொடர்ந்து ஒத்திகை (auditions) காண்பிக்குமாறும் கோரப்படுவர். வசஅமைவின் போது நிகழ்ச்சியின் விதிமுறைகள் மற்றும் செயன்முறைகள் பற்றி அறிவிக்கப்படும்.

14. போட்டியாளர்களுக்கு நிதி உதவி ஏதும் வழங்கப்படுமா?

ஆம், பிந்திய நிலைகளில், தெரிவு செய்யப்படும் அணிகளுக்கு போட்டிக்கு அவசியமான சவால்களை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்டளவு நிதி உதவிகள் வழங்கப்படும்.

15. எந்தவொரு தரப்புடனும் நாம் ஏதேனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டுமா?

பதிவு செய்யும் போது, போட்டியார்கள் KVA நிகழ்ச்சி தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும்.

16. போட்டியின் நடுவர்களாக யார் செயற்படுவார்கள்?

வெவ்வேறு துறைசார் நிபுணர்கள், உயர்மட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கல்விமான்கள் போன்றவர்களால் மத்தியஸ்தம் வகிக்கப்படும்.

17. நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறும்?

பெருமளவில் நிகழ்ச்சிகள் கொழும்பில் நடைபெறும் (மொபிடெல் இனோவேஷன் சென்ரர், ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டி, கொழும்பு 10)

18. எப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்?

விவரங்களுக்கு காத்திருக்கவும்

19. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் காலம் என்ன?

விவரங்களுக்கு காத்திருக்கவும்

20. போட்டியாளர் எனும் வகையில், எனக்கு என்ன கிடைக்கும்?

போட்டியாளர் எனும் வகையில், துறைசார்ந்த நிபுணர்கள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் என பல தரப்பினருக்கு உங்களை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை பெறுவீர்கள். நிகழ்ச்சி ஆலோசகர்களுடன் நீங்கள் நெருக்கமாக செயலாற்றுவதுடன், அவர்களிடமிருந்து வழிகாட்டல்கள், ஆலோசனைகள், உங்கள் சிந்தனைகள் மீதான கருத்துக்கள், விமர்சனங்கள், புத்தாக்கங்கள், வியாபார வாய்ப்புகள் பற்றி விடயங்களை  அறிந்து கொள்ளலாம். போட்டியாளர்களுக்கு தமது வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்வது தொடர்பான அறிவை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  நீங்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம், எனவே உங்கள் சிறந்த புத்தாக்கங்கள் நாட்டின் சகல மக்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படும்.

21. வெற்றியாளர்களுக்கு எவ்வாறான வெகுமதிகள் வழங்கப்படும்?

மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றியாளர்கள் பெருமளவு பணப்பரிசுகளை வெல்வார்கள்.

22. எமது சமர்ப்பிப்பு ஏன் தெரிவு செய்யப்படவில்லை?

ஏனைய விண்ணப்பதாரிகள் சிறந்த சிந்தனைகளை சமர்ப்பித்திருந்தமை நீங்கள் தெரிவு செய்யப்படாமைக்கு காரணமாக அமைந்திருக்கும்.